Skip to main content
ஈரடுக்குப் பேருந்தில் தீ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஈரடுக்குப் பேருந்தில் தீ

வாசிப்புநேரம் -

புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் ஈரடுக்குப் பேருந்தில் தீ மூண்டது.

SMRT பேருந்துச் சேவை எண் 972இல் நேற்று முன்தினம் (22 மார்ச்) காலை சுமார் 11.50 மணியளவில் தீப்பற்றியது. 

பெட்டிர் ரோட்டில் (Petir Road) உள்ள பேருந்து நிறுத்துமிடத்தைக் கடந்துகொண்டிருந்த வேளையில் பேருந்தின் இயந்திரத்திலிருந்து புகை வருவதை ஓட்டுநர் கவனித்ததாக 8World ஊடகத்திடம் SMRT கூறியது.

பேருந்தில் இருந்த 19 பேரையும் வெளியேறும்படி ஓட்டுநர் கூறியதாக அது சொன்னது.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் தீயை அணைத்தனர்.

சம்பவத்தில் பயணிகள் யாரும் காயமடையவில்லை. அவர்கள் இன்னொரு பேருந்தில் ஏறினர்.

பேருந்து பணிமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக SMRT சொன்னது.

எப்படித் தீப்பற்றியது என்று விசாரிக்கப்படுகிறது.

ஆதாரம் : Others/8World

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்