Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இரு முகக்கவசங்கள் அணிவதால் கிருமித்தொற்றிலிருந்து அதிகப் பாதுகாப்புக் கிடைக்குமா?

சிங்கப்பூரில் சமூக அளவிலான கிருமிப்பரவல் மோசமாகி வருகிறது.

வாசிப்புநேரம் -
இரு முகக்கவசங்கள் அணிவதால் கிருமித்தொற்றிலிருந்து அதிகப் பாதுகாப்புக் கிடைக்குமா?

(கோப்புப் படம்: REUTERS/Leah Millis)

சிங்கப்பூரில் சமூக அளவிலான கிருமிப்பரவல் மோசமாகி வருகிறது.

இவ்வேளையில், பலரும் ஒரு முகக்கவசத்திற்குப் பதிலாக, ஒன்றன் மேல் ஒன்றாக இரு முகக்கவசங்களை அணிவதைக் காண முடிகிறது.

ஆனால், அது அவசியமா?

மருத்துவர் டாக்டர் பைசலைக் கேட்டறிந்தது 'செய்தி'...

"ஒன்றன் மேல் ஒன்றாக இரு முகக்கவசங்களை அணிவது எப்போதும் இரட்டிப்புப் பாதுகாப்பு அளிக்கும் என அர்த்தம் இல்லை."

என்றார் டாக்டர் பைசல்.

"அது வசதியாக உள்ளதா?"

" பாதுகாப்பு அளிப்பது போன்ற பொய்யான உணர்வை அது ஏற்படுத்துகிறதா?"

ஆகியவற்றை, இரட்டை முகக்கவசங்கள் அணிவதால் ஏற்படக்கூடிய நன்மைகளுடன் எடைபோட்டுப் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

எனினும், ஒரே நேரத்தில் 2 முகக்கவசங்களை அணிவதைவிட, ஒரு முகக்கவசத்தை முறையாக அணிந்து, பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது சிறந்தது என்று டாக்டர் பைசல் குறிப்பிட்டார்.

"ஒரு முகக்கவசத்தை முறையாக அணிவதோடு, கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, தனிநபர் சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது, ஆரோக்கியமாக இருப்பது, பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்றுவது"

ஆகியவை முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.

ஆகவே, இரு முகக்கவசங்களை அணிவதால், கிருமித்தொற்றிலிருந்து அதிகப் பாதுகாப்புக் கிடைக்கும் என்று கூறிவிட முடியாது.

கூடவே, பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதும் முக்கியம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்