Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"அனுபவங்களைக் கதையாக்கினேன்" - இருமொழிக் கல்விக்கான லீ குவான் யூ நிதி பெற்ற டாக்டர் சித்ரா சேகர்

வாசிப்புநேரம் -

அனுபவங்களையே கதையாக்கியதாகச் சொல்கிறார்,
இருமொழிக் கல்விக்கான லீ குவான் யூ நிதி வாயிலாக மானியம் பெற்ற டாக்டர் சித்ரா சேகர்.

தேசிய நூலக வாரியம், இருமொழிக் கல்விக்கான லீ குவான் யூ நிதி - இவற்றின் ஆதரவில் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர் சித்ராவின் புத்தகங்களில் ஒன்றான 'மரம் நடும் நாள்' மின்-நூலாக வெளியிடப்படவுள்ளது.

சிறார் விரும்பும் வகையில், வெவ்வேறு ஓவியர்களின் கைவண்ணத்தில், எளிமையான நடையில் புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

 

"பிள்ளைகளுக்குத் தமிழ்மொழியில் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டுமானால், மொழியைப் பேசவும், வாசிக்கவும் அவர்களுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்க வேண்டும்,"


என்று டாக்டர் சித்ரா கூறினார்.

தன்னுடைய அனைத்துப் புத்தகங்களிலும் பொது நலச் சிந்தனைகளை உட்படுத்தியிருப்பதாகவும் சொன்னார் டாக்டர் சித்ரா.

"உதாரணத்திற்கு, 'திரும்பி வந்த குருவிகள்' புத்தகம் வாயிலாக இயற்கையை நேசிப்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளேன்".

சிறுவர்களுக்கான தாய்மொழி நூல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியாக உள்ளூரின் தாய்மொழி எழுத்தாளர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

அது குறித்துப் பேசிய தேசிய நூலக வாரியத்தின், தமிழ்மொழிச் சேவைகள் பிரிவின் தலைவர் அழகிய பாண்டியன், "இதன் வாயிலாக, நூல்கள், மின்-நூல்கள் ஆகிய இரண்டின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும்," என்றார்.

"இந்த மானியம் இரு முயற்சிகளை உட்படுத்தியுள்ளது. ஒன்று, ஏற்கனவே வெளியிடப்பட்ட நூல்களை மின்-நூல்களாக மாற்றுவது; மற்றொன்று, இதுவரை எழுதப்படாதப் புதிய நூல்களை உருவாக்குவது,"


என திரு. அழகிய பாண்டியன் 'செய்தி'யிடம் தெரிவித்தார்.

ஆர்வமுள்ள உள்ளூர் எழுத்தாளர்கள் கூடுதல் தகவல் பெற enquiry [at] nlb.gov.sg எனும் மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்