Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ரெட் சுவஸ்திகா பள்ளியில் ஊழியரைக் காரைக் கொண்டு தள்ளிய சம்பவம் - 61 வயது ஓட்டுநர் கைது

ரெட் சுவஸ்திகா பள்ளியில் ஊழியரைக் காரைக் கொண்டு தள்ளிய சம்பவம் - 61 வயது ஓட்டுநர் கைது 

வாசிப்புநேரம் -

ரெட் சுவஸ்திகா பள்ளியில் பாதுகாப்பு அதிகாரியைக் காரைக் கொண்டு தள்ளிய சம்பவத்தின் தொடர்பில் 61 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்துக் காவல்துறைக்கு இன்று காலை 11:40 மணிவாக்கில் தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயத்தை விளைவிக்கும் எண்ணத்தில் நடந்துகொண்ட சந்தேகத்தின்பேரில் அந்த 61 வயது
ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 62 வயதுப் பாதுகாப்பு அதிகாரிக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டதாகக் காவல்துறை கூறியது.

விசாரணை தொடர்வதாகவும் அது தெரிவித்தது.

சம்பவம் குறித்துப் பாதுகாப்பு அதிகாரிகள் சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.

காயமடைந்த அதிகாரி வீட்டில் ஓய்வெடுப்பதாகச் சங்கம் அதன் Facebook பக்கத்தில் தகவல் வெளியிட்டது.

ரெட் சுவஸ்திகா பள்ளி பிடோக்கில் உள்ளது.

சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் பரவிவருகிறது.

காணொளியில் பள்ளியின் நுழைவாயிலில் ஒரு வெள்ளைக் காரை ஊழியர் ஒருவர் தடுத்து நிறுத்துகிறார்.

அதன்பிறகு கார் ஓட்டுநர் தமது காரைக்கொண்டு அந்த ஊழியரைத் தள்ளுகிறார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa