தெம்பனிஸ் விபத்தில் இருவர் மரணம் - ஓட்டுநர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
வாசிப்புநேரம் -
படம்: CNA/Raydza Rahman
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தெம்பனிஸில் கார் விபத்தில் இரு பயணிகளுக்கு மரணத்தை விளைவித்த குற்றங்களை ஓட்டுநர் ஒப்புக்கொண்டுள்ளார்.
முகமது ஷாவி இஸ்மாயில் (Syafie Ismail) வேக வரம்பைத் தாண்டி மணிக்குக் குறைந்தது 129 கிலோ மீட்டர் ஓட்டியிருக்கிறார்.
அவருக்கு வயது 45.
உச்சநேரத்தின்போது சாலைச் சந்திப்பில் சிவப்பு விளக்கை மீறிச்சென்று மற்ற வாகனங்களின் மீது மோதினார்.
அதன் விளைவாக ஒரு 17 வயது மாணவியும் 57 வயது மாதும் உயிரிழந்தனர்.
சம்பவம் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி நடந்தது.
அந்த இடத்தில் இருந்த பல வாகனங்களில் பெற்றோரும் பிள்ளைகளும் இருந்தனர்.
சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
GrabHitch சேவையை நாடிய பயணியை ஷாவி தெம்பனிஸ் ரோட்டில் இறக்கினார்.
அப்போது அவரைத் தாண்டி ஒரு வாகனம் சென்றிருந்தது.
கோபமுற்ற ஷாவி, அந்த வாகனத்தைத் தாண்டி செல்ல குறைந்தது 122 கிலோ மீட்டர் ஓட்டினார்.
அவர் தொடர்ந்த அந்த வேகத்தில் சென்றார்.
சாலைச் சந்திப்பில் சிவப்பு விளக்கை மீறி ஓட்டினார். வழியில் இருந்த மூன்று வாகனங்களை மோதினார்.
அந்த வாகனங்கள் வழியில் இருந்த வேனையும் பேருந்தையும் மோதின.
பாதிகப்பட்ட பலர் post-traumatic stress disorder எனப்படும் கடும் மனவுளைச்சலுக்கு ஆளாகியதாக நீதிமன்றம் தெரிவித்தது.
சம்பவத்தில் மாண்ட 17 வயது மகளின் தாயார் கடும் மனச்சோர்வுக்கு (Major depressive disorder) ஆளானார்.
ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டிய குற்றத்திற்காக ஷாவிக்கு 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
வாகனத்தை ஓட்டத் தடை விதிக்கப்படலாம்.
திருத்தம்: விபத்தில் மாண்டவர்கள் இரு பாதசாரிகள் என்று இதற்கு முன்பு தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆதாரம் : CNA