Skip to main content
மலேசியாவில் RON95 பெட்ரோல் நிரப்பிய சிங்கப்பூரருக்கு $6,300 அபராதம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மலேசியாவில் RON95 பெட்ரோல் நிரப்பிய சிங்கப்பூரருக்கு $6,300 அபராதம்

வாசிப்புநேரம் -
மலேசியாவில் RON95 பெட்ரோல் நிரப்பிய சிங்கப்பூரருக்கு $6,300 அபராதம்

(ப்டம்: Johor KPDN)

வெளியீடு : 04 Jul 2026 12:53PM புதுப்பிப்பு : 04 Jul 2026 12:56PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலேசியாவில் RON95 சலுகை விலை பெட்ரோலை நிரப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சிங்கப்பூர் ஓட்டுநருக்கு 20,000 ரிங்கிட் (சுமார் 6,300 வெள்ளி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட காரில் ஏப்ரல் 9ஆம் தேதி அவர் RON95 பெட்ரோலை நிரப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

50 வயதுக்கு மேற்பட்ட அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.

அவர் அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 3 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.

ஆனால் அவர் அதே நாளில் அபராதத்தைக் கட்டிவிட்டார் என்று New Straits Times நாளிதழ் தெரிவித்தது.

ஏப்ரல் முதல் தேதியிலிருந்து வெளிநாட்டுக் கார் உரிமையாளர்கள் RON95 பெட்ரோலை நிரப்பினால் அவர்கள் மீதும் பெட்ரோல் நிலைய நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க அனுமதிக்கும் புதிய விதிமுறை நடப்புக்கு வந்தது.

முன்னதாகப் பெட்ரோல் நிலைய நிர்வாகத்தின் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விதியை மீறும் ஓட்டுநர்களுக்கு அதிகபட்சம் 1 மில்லியன் ரிங்கிட் (சுமார் 317,140 வெள்ளி) அபராதம், 3 ஆண்டுச் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்