Skip to main content
சிராங்கூனில் விபத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிராங்கூனில் விபத்து - தப்பிச் சென்ற ஓட்டுநர் கைது

வாசிப்புநேரம் -
சிராங்கூனில் விபத்து - தப்பிச் சென்ற ஓட்டுநர் கைது

(படம்: Envato Elements)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிராங்கூன் பகுதியில் மோட்டார்சைக்கிள் ஓட்டுநரை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. கார் ஓட்டுநருக்கு வயது 46. மோட்டார்சைக்கிள் ஓட்டுநருக்கு வயது 38. விபத்தில் மோட்டார்சைக்கிள் கவிழ்ந்தது, கார் பெருமளவில் சேதமடைந்து புகை கிளம்பியது. கார் ஓட்டுநர் முதலில் மோட்டார்சைக்கிளோட்டிக்கு என்னவாயிற்று என்று பார்க்கச் சென்றார். பின்னர் அவர் காரில் ஏறித் தப்பியதாகச் சொல்லப்பட்டது. இன்று நள்ளிரவு தாண்டி 12.40 மணியளவில் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை 8 World செய்தியிடம் சொன்னது. அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைவதற்கு முன்பாக ஓட்டுநர் தப்பியோடியதாகத் தெரிகிறது. எனினும் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்;
விசாரணை தொடர்கிறது. மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் சுயநினைவுடன் டான் டொக் செங் மருத்துவமனைக்கு (Tan Tock Seng Hospital) அனுப்பப்பட்டார்.

ஆதாரம் : Others/8 World

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்