சிங்கப்பூர் trending
FairPriceஇன் ஓட்டுநரில்லா லாரி
வாசிப்புநேரம் -
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
FairPrice குழுமத்தின் ஓட்டுநரில்லா லாரி சாலைகளில் காணப்பட்டுள்ளது.
லாரி Pokka நிறுவனத்தின் பானங்களைப் பயனியர் (Pioneer) வட்டாரத்திலிருக்கும் கிடங்கிலிருந்து FairPriceஇன் விநியோக நிலையத்துக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்தது.
அதன் காணொளிகள் இணையத்தில் பரவின.
காணொளிகளில் கொள்கலனைப் போல் காட்சியளித்த லாரி தானாகச் சாலையில் பயணம் செய்துகொண்டிருந்தது தெரிந்தது.
லாரியில் ஓட்டுநர் அமரும் பகுதியே இல்லை.
இணையவாசிகளிடையே ஒரே பரபரப்பு.
காணொளிகள் குறித்து இணையத்தில் இரண்டு விதமான கருத்துகள்.
காணொளியைக் கண்ட சிலர் வியந்து போயினர். நகைச்சுவையாகக் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
"பாதுகாப்பாகத்தான் ஓட்டுகிறது," என்று பலர் குறிப்பிட்டனர்.
"சிங்கப்பூரர்கள் இனி வேலை பார்க்கத் தேவையில்லை," என்று ஒருவர் பதிவிட்டார்.
ஆனால் வேறு சிலர், தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளைக் குறைத்துவிடுமோ என்று கவலை தெரிவித்தனர்.
ஓட்டுநரில்லா லாரி உண்மையிலேயே எவ்வளவு பாதுகாப்பானது என்பது குறித்தும் சிலர் கேள்வி எழுப்பினர்.

ஆதாரம் : Mediacorp Seithi