Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

குறிப்பிட்ட உரிமம் வைத்திருப்போர் மேலும் சில வாகனங்களை ஓட்ட அனுமதி

வாசிப்புநேரம் -
குறிப்பிட்ட உரிமம் வைத்திருப்போர் மேலும் சில வாகனங்களை ஓட்ட அனுமதி

(கோப்புப் படம்: CNA/Syamil Sapari)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் நாளை (15 ஜூன்) முதல் சில வாகன உரிமங்களின் விதிகள் தளர்த்தப்படவிருக்கின்றன.

3, 3A பிரிவுக்கான வாகன உரிமம் வைத்திருப்போர் 3,000 கிலோகிராம் வரையிலான மின் வாகனங்களை ஓட்டமுடியும்.

எல்லா விதமான மின் இலகு லாரிகளுக்கும் (Electric light goods vehicles) சிறிய பேருந்துகளுக்கும் (mini buses) அனுமதி பொருந்தும்.

தற்போது ஓட்டுநர்கள் 2,500 கிலோகிராம் வரையிலான சில மின் வாகனங்களை மட்டுமே ஓட்டமுடியும் என்று போக்குவரத்துக் காவல்துறை கூறியது.

நடைமுறையில் இருக்கும் வாகனங்களைக் காட்டிலும் மின் இலகு லாரிகளும் சிறிய பேருந்துகளும் பொதுவாக 400 முதல் 500 கிலோகிராம் வரை அதிக எடை கொண்டிருக்கும்.

அவற்றில் உள்ள மின்-கலன் கனமாக இருப்பது அதற்குக் காரணம்.

சிங்கப்பூர் 2040க்குள் பசுமை எரிசக்தி வாகனங்களுக்கு முழுமையாக மாறத் திட்டமிடுகிறது.

திட்டத்தின் ஓர் அங்கமாக உரிமத்தின் விதிகள் தளர்த்தப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்