போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிரடி நடவடிக்கை... 146 சந்தேக நபர்கள் கைது
வாசிப்புநேரம் -

(CNB)
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு மேற்கொண்ட இருவார அமலாக்க நடவடிக்கையில் 146 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தீவு முழுவதிலும் இம்மாதம் 6ஆம் தேதிமுதல் இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 55,000 வெள்ளி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்டவை:
- 28 கிராம் போதைமிகு அபின்
- 234 கிராம் ஐஸ் (Ice)
- 173 கிராம் கஞ்சா
- சிறிய அளவுகளில் கெட்டமைன், கொக்கெய்ன் (Ketamine, cocaine)
- 10 கிராம் புதுவகை போதையூட்டும் கலவைகள்
- 11 எக்ஸ்டசி மாத்திரைகள் (Ecstasy)
- 1 எரிமின்-5 மாத்திரை (Erimin-5)
- திரவம் வடிவிலான Gamma-hydroxybutyrate (GHB) நிறைந்திருப்பதாகச் சந்தேகிக்கப்படும் போத்தல்
அமலாக்க நடவடிக்கை இடம்பெற்ற வட்டாரங்கள்:
- ஜூரோங்
- மரீன் பரேட்
- செங்காங்
- யீஷுன்
கைதுசெய்யப்பட்டவர்களின் தொடர்பில் விசாரணை தொடர்கிறது.