Skip to main content
போதைப்பொருள் குற்றங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

போதைப்பொருள் குற்றங்கள் - 99 பேர் கைது

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய சோதனை நடவடிக்கையில் 99 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

போதைப்புழக்கம், போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். 

அங் மோ கியோ, சுவா சூ காங், ஜூரோங் உட்படத் தீவு முழுக்கச் சோதனை நடத்தப்பட்டது. 

இந்த மாதம் 2ஆம் தேதி தொடங்கி நேற்று (6 பிப்ரவரி) வரை அதிகாரிகள் சோதனைகளை நடத்தினர். 

கைதானோர் சிலரின் வீடுகளில் போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

கஞ்சா, போதைமிகு அபின், ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 38,000 வெள்ளி.

எட்டோமிடேட் ரசாயனம் உள்ளதாக நம்பப்படும் 75 குப்பிகள் உட்பட மின்-சிகரெட் தொடர்பான பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்