போதைப்பொருள் குற்றத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகம் - 15 வயது மாணவன் உட்பட 107 பேர் கைது

Central Narcotics Bureau
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தீவு முழுவதும் நடத்திய அதிரடிச் சோதனையில் 15 வயது மாணவன் உட்பட 107 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மாணவனின் 44 வயது தாயரும் 42 வயது மாற்றான் தந்தையும் அடங்குவர். அம்மூவரும் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அங் மோ கியோ (Ang Mo Kio), பேலஸ்டியர் (Balestier), பிடோக் (Bedok), மார்சிலிங் (Marsiling), பொங்கோல் (Punggol), தெம்பனிஸ் (Tampines) ஆகிய வட்டாரங்களில் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில்:
* 133 கிராம் ஐஸ் (Ice)
* 78 கிராம் கஞ்சா
* 69 கிராம் போதைமிகு அபின் (heroin)
* 0.4 கிராம் கெட்டமைன் (ketamine)
* 16 எக்ஸ்டசி (Ecstasy) மாத்திரைகள்
ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு 25,400 வெள்ளிக்கும் மேல் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கைதான சந்தேக நபர்களிடம் விசாரணை தொடர்கிறது.