கைது செய்யப்போன அதிகாரியின் தொடையைக் கடித்த ஆடவர்
(படம்: Central Narcotics Bureau)
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தில் 64 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரரான அவர் நேற்று முன்தினம் (3 நவம்பர்) காலையில் மார்சிலிங் ரோடு (Marsiling Road) வீடு ஒன்றில் கைதானார்.
கைது செய்யப்பட்டபோது அவர் கடுமையாக எதிர்த்து மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரியைத் தாக்கினார்.
ஆடவர் அதிகாரியின் தொடையைக் கடித்தார்.
மேலும் இரு அதிகாரிகள் மீது எச்சில் துப்பினார்.
மூன்று அதிகாரிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை வழங்கப்பட்டது.
ஆடவரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில்....
- சுமார் 1,554 கிராம் கஞ்சா
- 166 கிராம் ஐஸ் (Ice)
- 25 கிராம் எக்ஸ்டசி (Ecstasy)
- 356 வெள்ளி ரொக்கம்
ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அந்தப் போதைப்பொருளின் மதிப்பு 55,000 வெள்ளிக்கும் மேல்.
அது 320 போதைப்பொருள் புழங்கிகள் ஒரு வாரத்திற்கு பயன்படுத்த போதுமானது.
500 கிராமுக்கு அதிகமான அளவு கஞ்சா கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.
விசாரணை தொடர்கிறது.