Skip to main content
$150,000 மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்டது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

$150,000 மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்டது - 2 மலேசியர்களும் 1 சிங்கப்பூரரும் கைது

வாசிப்புநேரம் -
$150,000 மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்டது - 2 மலேசியர்களும் 1 சிங்கப்பூரரும் கைது

(படம்: CNB)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் போதைப்பொருளைக் கடத்தி வர முயன்ற சந்தேகத்தில் 2 மலேசிய ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவரின் வயது 33, மற்றொருவரின் வயது 36.

அவர்கள் இரு வேறு தினங்களில் போதைப்பொருளைத் தங்கள் வாகனங்களில் கடத்தி வர முயன்றதாகக் கூறப்பட்டது.

33 வயது ஆடவர் கடந்த மாதம் 31ஆம் தேதி சுமார் 400 கிராம் ice போதைப்பொருளைக் காரில் மறைத்துவைத்துக் கடத்த முயன்றார்.

அதிகாரிகள் அவரைச் சோதித்தபோது அவரது கால்சட்டையில் போதைப்பொருள் கொண்ட கூடுதல் பொட்டலங்களும் சுமார் 2,900 வெள்ளியும் சில வெளிநாட்டு நாணயங்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடமிருந்து பறிமுதலான போதைப்பொருளின் மதிப்பு 52,000 வெள்ளிக்கும் அதிகம் என்று கூறப்பட்டது.

கூடுதல் விசாரணைக்குப் பின் அதே நாளில் பிராஸ் பாசாவில் (Bras Basah) போதைப்பொருள் குற்றங்கள் புரிந்த சந்தேகத்தில் 52 வயதுச் சிங்கப்பூர் ஆடவர் கைதானதாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையமும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் தெரிவித்தன.

மற்றொரு சம்பவத்தில் இம்மாதம் 2ஆம் தேதி காலை 36 வயது மலேசிய ஆடவர் சுமார் 4 கிலோகிராம் போதைமிகு அபினையும் 10 கிராம் ketamineஐயும் தமது மோட்டார் சைக்கிளில் வைத்துக் கடத்த முயன்றார்.

அவற்றின் மொத்த மதிப்பு 100,000 வெள்ளிக்கும் அதிகம் என நம்பப்படுகிறது.

சம்பவங்கள் குறித்த விசாரணை தொடர்கிறது.
 
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்