3 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட ஆடவர்
வாசிப்புநேரம் -
படம்: CENTRAL NARCOTICS BUREAU
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தில் 25 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று (7 ஜூலை) அதிகாலை கிம் கியாட் ரோட்டில் (Kim Keat Road) ஆடவர் ஓட்டிக்கொண்டிருந்த காரை
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் மடக்கினர்.
காரைச் சோதித்தபோது பின்னிருக்கைக்கு அடியில்
3 கிலோ 129 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
ஆடவரின் கேலாங் ஈஸ்ட் கூட்டுரிமை வீட்டைச் சோதித்ததில் மேலும் சில போதைப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
121 கிராம் ஐஸ், 55 கிராம் Ecstasy உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பிரிவு கூறியது.
ஆடவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
சிங்கப்பூரில் அரைக் கிலோவுக்கு மேல் கஞ்சா கடத்துவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

ஆதாரம் : Mediacorp Seithi