Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் trending

சோதனைச் சாவடியில் இடுப்புப் பகுதியில் போதைப்பொருளை மறைத்திருந்த ஆடவர்

வாசிப்புநேரம் -
சோதனைச் சாவடியில் இடுப்புப் பகுதியில் போதைப்பொருளை மறைத்திருந்த ஆடவர்

படம்: Central Narcotics Bureau

வெளியீடு : 21 Mar 2026 03:15PM புதுப்பிப்பு : 21 Mar 2026 03:16PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் நிலச் சோதனைச் சாவடிகளில் இரண்டு மில்லியன் வெள்ளிக்கு மேல் மதிப்புடைய போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.  

இரண்டு சம்பவங்களில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். 

முதல் சம்பவத்தில் துவாஸ் சோதனைச் சாவடியில் 29 வயது மலேசிய ஆடவர் பிடிபட்டார். 

அவரது மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் சோதித்தபோது போதைப்பொருள் மறைக்கப்பட்ட கறுப்புப் பைகள் சிக்கின. 

மற்றொரு சம்பவத்தில் மலேசிய வாகனத்தில் பயணியாக வந்த 29 வயது சிங்கப்பூர் ஆடவர் அவரது இடுப்புப் பகுதியில் மறைத்து எடுத்து வந்த போதைப்பொருள் பிடிபட்டது. 

8,000க்கும் அதிகமான போதைப்புழங்கிகள் ஒரு வாரத்துக்குமேல் பயன்படுத்தக்கூடிய போதைமிகு அபின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் சிக்கியதாக அதிகாரிகள் கூறினர். 

கைதான இருவரிடமும் விசாரணை நடைபெறுகிறது.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்