சிங்கப்பூர் trending
டன்மன் ரோட்டில் பேருந்து செல்லமுடியாத அளவிற்கு நெரிசல்...ஏன்?
Facebook/SGRV ADMIN
This audio is generated by an AI tool.
டன்மன் ரோட்டில் அண்மை நாள்களில் அளவுக்கு அதிகமான நெரிசல்...
பேருந்தும் நிறுத்தம்வரை வரிசை நீள்கிறது.
பேருந்துகளால் உரிய இடத்தில் பயணிகளை இறக்கிவிட முடியாததால் சாலைகளில் இறக்கிவிடும் நிலைமை...
போக்குவரத்தைச் சீராக்கச் சாலையில் பேருந்துக்காக அதிக இடத்தை ஒதுக்கினர் அதிகாரிகள்....
டன்மன் ரோட்டில் ஏன் அவ்வளவு நெரிசல்?
பெட்ரோலுக்காக.
Union Gas Holdings நிர்வாகத்தின்கீழ் செயல்படும் Cnergy எரிவாயு நிலையம் அங்கு உள்ளது.
சிங்கப்பூரில் தற்போதைக்கு அங்குதான் பெட்ரோல் மலிவாக விற்கப்படுகிறது.
பெட்ரோலை நிரப்ப அங்கு வாகனங்கள் குவிகின்றன.
ஈரான் போரால் எண்ணெய் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. அதன் தாக்கம் சிங்கப்பூரிலும் தெரிகிறது.
அண்மையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 வெள்ளியைத் தாண்டியது.
Cnergy எரிவாயு நிலையத்தில் 95-octane ரகப் பெட்ரோல் சுமார் 2.40 வெள்ளிக்கு விற்கப்படுகிறது.