Skip to main content
71 பூனைகள்... 22 மாதங்கள்... பட்டினியால் நேர்ந்த கொடூரம்!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

71 பூனைகள்... 22 மாதங்கள்... பட்டினியால் நேர்ந்த கொடூரம்!

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் 71 பூனைகளை அலட்சியமாக விட்டதாய் ஆண், பெண் இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு ஆண்டுகளாகப் போதிய உணவு, தண்ணீர் இன்றி அவர்கள் பூனைகளைத் தவிக்கவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த அலட்சியத்தின் விளைவாக 9 பூனைகள் உயிரிழந்தன.

36 வயது முகமது கைருல் நயிம் சைனோல் (Muhammad Khairul Naim Zainol), 32 வயது நூருல் நாடியா நூர் முகமது (Nurul Nadiah Noor Mohamed)ஆகியோர் மீது 71 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

செகர் ரோட்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சி கழக வீட்டில் அந்தப் பூனைகளை அவர்கள் வளர்த்து வந்தனர்.

2022ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 20 வரை சுமார் 22 மாதங்கள் பூனைகள் கவனிக்கப்படாமல் விடப்பட்டதாகக் கூறப்பட்டது.

பூனைகளுக்குத் தினசரி உணவு, தண்ணீர் வழங்காமல் அவற்றுக்குத் தேவையற்ற வலியையும் வேதனையையும் ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 18 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது $15,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்