டுரியானின் சுவை, விலை - விற்பனையாளர்கள் கவலை
வாசிப்புநேரம் -
Unsplash/Jim Teo
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
டுரியான் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பருவம் தொடங்கிவிட்டது.
வரும் வாரங்களில் மழை பெய்தால் பழத்தின் தரம் பாதிக்கப்படலாம் என்று டுரியான் விற்பவர்கள் கவலைப்படுகின்றனர்.
மலேசியா முழுவதும் டுரியான் பழங்கள் காய்க்கத் தொடங்கிவிட்டன.
இந்த மாத இறுதியில் உச்ச அறுவடை காலம்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அறுவடை குறைவாக இருக்கும் என டுரியான் விற்பவர்கள் கணிக்கின்றனர்.
அறுவடை குறைந்தால் விலை உயர வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில் பழத்தின் தரமும் விற்பனையைப் பாதிக்கும் என கூறப்படுகிறது.
வரும் வாரங்களின் வானிலை மாற்றங்கள் டுரியான் பழங்களின் தரத்தையும் விநியோகத்தையும் பாதிக்கலாம் என்ற கவலை விற்பனையாளர்களிடையே உள்ளது.
சவால்கள் இருந்தாலும், வாடிக்கையாளர்களைச் சென்றடைய புதிய வழிகளைத் தேடுகின்றனர் விற்பனையாளர்கள்.
டுரியான் விற்கப்படும் முறையில் நிறைய மாற்றம்.
வாடிக்கையாளர்களை ஈர்க்க நேரலை விற்பனை முறை உதவுகிறது.
நேரலை விற்பனையில் பழங்கள் வெட்டிக் காட்டப்படுகின்றன.
வாடிக்கையாளர்கள் அதன் தரத்தை பார்த்துவிட்டு வாங்கலாம்.
இதனால் வருமானம் 50 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது என்கிறார் விற்பனையாளர் ஒருவர்.

ஆதாரம் : Mediacorp Seithi