Skip to main content
பொம்மைக்குள் சிகரெட் கடத்தல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பொம்மைக்குள் சிகரெட் கடத்தல் - 3 மாணவர்கள் கைது

வாசிப்புநேரம் -
பொம்மைகளுக்குள் சிகரெட்டுகளை வைத்துக் கடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் 3 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் சீனாவைச் சேர்ந்த மாணவர்கள் என்று 8world செய்தி கூறுகிறது.

இந்த மாதம் 22, 23ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் 7 சிகரெட் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை பொம்மைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

இதன் தொடர்பில் ஜூரோங் வெஸ்ட்டில் (Jurong West) சீனாவைச் சேர்ந்த 21 வயது மாணவர் கைதுசெய்யப்பட்டார். அவர்மீது கடந்த 25ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

அவருடன் கைதான மேலும் 2 மாணவர்கள் 22, 28 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த மூன்று பேரும் மாணவர் அனுமதி அட்டை வைத்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளுக்குச் செலுத்தப்பட்டிருக்க வேண்டிய தீர்வையின் மதிப்பு 1,280 வெள்ளி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்