Skip to main content
சுங்கத்துறையின் அதிரடிச் சோதனை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சுங்கத்துறையின் அதிரடிச் சோதனை - தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள், 2 வேன்கள் பறிமுதல்; இருவர் கைது

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்ச் சுங்கத்துறை நடத்திய அதிரடிச் சோதனையில் இரண்டு ஆடவர்கள் பிடிபட்டனர். சிங்கப்பூரைச் சேர்ந்த 44 வயது ஆடவரும் மலேசியாவைச் சேர்ந்த 21 வயது ஆடவரும் கைது செய்யப்பட்டனர்.

இம்மாதம் (செப்டம்பர் 2024) 18ஆம் தேதி, பீஷான்-அங் மோ கியோ பார்க் கார்நிறுத்தத்தில் இருந்த 2 வேன்களை அதிகாரிகள் சோதித்தனர்.

ஒரு வேனில் 2,958 பெட்டிகளில் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் இருந்தன. இரண்டாவது வேனில் அத்தகைய 150 பெட்டிகள் இருந்தன.

மொத்தம் 336,820 வெள்ளி மதிப்புள்ள தீர்வையும் பொருள், சேவை வரியும் செலுத்தப்படவில்லை.

சிகரட்டுகளும் வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இரண்டு ஆடவர்களிடமும் முன்பின் தெரியாத ஒருவர் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளை விநியோகம் செய்யச் சொன்னதாகக் கூறப்படுகிறது.

தீர்வை செலுத்தப்படாத பொருள்களை வாங்குவது, வைத்திருப்பது, விநியோகம் செய்வது, விற்பது முதலியவை சட்டப்படி கடும் குற்றங்கள்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், செலுத்தப்படாத தீர்வை, பொருள் சேவை வரித் தொகையைப் போன்று 40 மடங்கு அபராதமோ 6 ஆண்டு வரை சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

அத்தகைய நடவடிக்கைகளில் உபயோகிக்கப்படும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படலாம்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்