Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் Dyson நிறுவனத்தில் எதிர்பாரா ஆட்குறைப்பு நடவடிக்கை

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் Dyson நிறுவனத்தில் எதிர்பாரா ஆட்குறைப்பு நடவடிக்கை

(படம்: CNA/Raydza Rahman)

சிங்கப்பூரில் Dyson நிறுவனம் எதிர்பாராமல் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை இன்று மேற்கொண்டது.

அது ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் பிரிட்டனில் 1,000 பேரை வேலையிலிருந்து நீக்கிய Dyson, அது சிங்கப்பூரைப் பாதிக்காது என்று கூறியிருந்தது.

சிங்கப்பூரில் Dyson நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, அவர்களைத் தனித்தனியே சந்திக்கவேண்டும் என்ற மின்னஞ்சல் கிடைத்ததாகவும், தனியாகச் சந்தித்தபோது பணிநீக்கம் குறித்துத் தெரிவிக்கப்பட்டதாகவும் ஊழியர் ஒருவர் கூறினார்.

பணி நீக்கம் செய்யப்பட்டோரில் அதிகமானோர் உற்பத்தி, கொள்முதல் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்பட்டது.

Dyson நிறுவனத்திடம் எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்று முன்வைக்கப்பட்ட கேள்விக்கு அது பதில் கொடுக்கவில்லை.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு எப்படி ஆதரவு வழங்கப்படுகிறது என்ற கேள்விக்கும் அது பதிலளிக்க மறுத்துவிட்டது.



 
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்