Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

வேகக்கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்தாத இரு லாரிகள் பறிமுதல்

வாசிப்புநேரம் -
வேகக்கட்டுப்பாட்டுக் கருவியைப்  பொருத்தாத இரு லாரிகள் பறிமுதல்

படம்: Singapore Police Force

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் போக்குவரத்துக் காவல்துறையின் சோதனையின்போது இரண்டு லாரிகள் வேகக்கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது.

அவை அதிகாரிகளால் இழுத்துச் செல்லப்பட்டன.

லாரி ஓட்டுநர்களிடம் ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் தீவு முழுவதும் சோதனை நடத்தப்பட்டது.

2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்கு முன்பு பதிவுசெய்யப்பட்ட லாரிகள் ஜூலை முதலாம் தேதிக்குள் வேகக்கட்டுப்பாட்டுக் கருவியைப் (speed limiter) பொருத்தியிருக்க வேண்டும்.

லாரிகளில் வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதைப் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.

தற்போதைய நிலவரப்படி 1.1 விழுக்காட்டு லாரி உரிமையாளர்கள் வேகக்கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்தியதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்கவில்லை.

லாரிகளில் வேகக்கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்த உரிமையாளர்களுக்குப் பல வழிகளில் நினைவூட்டப்பட்டது.

குறுந்தகவல், மின்னஞ்சல், கடிதங்கள், நேரடிச் சந்திப்புகள் அவற்றில் அடங்கும்.

லாரிகளில் வேகக்கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்தத் தவறினால் 1,000 வெள்ளி வரை அபராதம் அல்லது அதிகபட்சம் 3 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
Related article image
படம்: Singapore Police Force
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்