Skip to main content
சிங்கப்பூரில் நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியம் உண்டா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியம் உண்டா? - நிபுணர்கள் கருத்து

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியம் உண்டா? - நிபுணர்கள் கருத்து

படங்கள்: X/Jimmy Puah, Facebook/Komuniti Segamat/Kapten Azali

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் ஒரே நாளில் (24 ஆகஸ்ட்) இரு முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அருகிலிருந்த பல மலேசிய மாநிலங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

சம்பவத்தை அடுத்து சிங்கப்பூரில் நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியம் உண்டா என்பதை அறிய சுற்றுப்புற ஆர்வலர் முனைவர் நா வெங்கட்ராமனிடம் பேசியது 'செய்தி'.

"இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் அருகிலிருக்கும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்படலாம்," என்றார் அவர்.

பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்பில்லை; ஆனால் நிலநடுக்கமே ஏற்படாது என்று சொல்லிவிட முடியாது என்றார் அவர்.

நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படும் பகுதியில் சிங்கப்பூர் இல்லை. இருந்தாலும் நிலநடுக்கங்களுக்கு எதிராக வலுவான வகையில் கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் திரு வெங்கட்ராமன் தெரிவித்தார்.

நிலஅதிர்வுகளைத் தாங்கும் வகையில் கட்டடங்கள் கட்டப்படுவதைக் கட்டட, கட்டுமான ஆணையம் (BCA) உறுதிசெய்கிறது.

சிங்கப்பூரில் மீட்கப்பட்ட பகுதிகளில் நிலநடுக்கத் தாக்கங்களைக் குறைக்க பாதுகாப்புகள் இருப்பதாகவும் திரு வெங்கட்ராமன் 'செய்தி'யிடம் பகிர்ந்தார்.

வலுவான அடித்தளங்கள் அமைப்பது, மண்ணை அடர்த்தியாக்கிப் பின் பயன்படுத்துவது, மீட்கப்பட்ட பகுதிகளில் மண் நிலைபெறுவதற்கு 20 ஆண்டுகள் வரை கால அவகாசம் அளிப்பது, மேட்டுப்பகுதி அமைத்து கட்டடம் கட்டுவது... இப்படி சிங்கப்பூர் பல வழிகளைக் கையாள்கிறது.

ஆராய்ச்சிகள் மூலம் நில மீட்புப் பணிகள் தொடர்ந்து மேம்படுத்தப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

சிங்கப்பூரில் அதிகாரிகள் மிகச் சிறந்த கண்காணிப்பு, எச்சரிக்கை முறைகளை வைத்திருப்பதாக CNA செய்தித்தளத்திடம் பேசிய சில நிபுணர்கள் கூறினர்.

இருப்பினும் சிங்கப்பூரும் மலேசியாவும் நில அதிர்வுகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்; கண்காணிப்பு முறைகளைப் பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப மேம்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்