"ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா கடலில் நீச்சல், நீர் நடவடிக்கைகளைத் தொடரலாம்"
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: Nuria Ling/ TODAY)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா கடலில் இன்று முதல் நீச்சல், நீர் நடவடிக்கைகளைத் தொடரலாம் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு (NEA) அறிவித்துள்ளது.
எண்ணெய்ப் படலம் எதுவும் தென்படவில்லை என்று அமைப்பு அதன் Facebook பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது,
சென்ற திங்கட்கிழமை (1 செப்டம்பர்) சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட Marine Dynamo கப்பலும் மால்ட்டாவில் (Malta) பதிவுசெய்யப்பட்ட கப்பலும் தானா மேராவுக்கு அருகே மோதிக்கொண்டன.
சம்பவ இடத்துக்கு அருகில் மிதமான எண்ணெய்க் கசிவு தென்பட்டது.
முன்னெச்சரிக்கையாகப் பூங்காவின் கடலில் நீந்துவது, கடல் நீருடன் நேரடித் தொடர்புகொண்ட விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்கும்படி அமைப்பு பொதுமக்களிடம் கூறியிருந்தது.