Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

6 நாள்களுக்குப் பிறகு ஜூரோங் ஈஸ்ட், புவன விஸ்தா நிலையங்களுக்கு இடையே ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளது

வாசிப்புநேரம் -

ஜூரோங் ஈஸ்ட், புவன விஸ்தா நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் சேவை 6 நாள்களுக்குப் பிறகு மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளது.

கிழக்கு - மேற்குப் பாதையின் ரயில் சேவையில் ஏற்பட்ட தடங்கல் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

தடைப்பட்டிருந்த ரயில் சேவை இன்று காலை மீண்டும் செயல்படத் தொடங்கியது.

"அனைத்து ரயில் சேவைகளும் மீண்டும் செயல்படுகின்றன. உங்கள் பொறுமைக்கு நன்றி," என்று SMRT நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

புவன விஸ்தா ரயில் நிலையத்தில் போக்குவரத்து நிலவரம் சுமுகமாக இருப்பதாக எங்கள் 'செய்தி' நிருபர் சவுரியம்மாள் கூறினார்.

பயணிகளின் பாதுகாப்பைக் கருதித் தற்காலிகமாக வேகக்கட்டுப்பாடு நடப்பில் இருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையமும் SMRT நிறுவனமும் தெரிவித்தன.

ரயில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

அந்த வேகக் கட்டுப்பாடு இன்று (1 அக்டோபர்) தொடங்கி வரும் வியாழக்கிழமை (3 அக்டோபர்) வரை நடப்பில் இருக்கும்.

கிழக்கு - மேற்கு ரயில்சேவையைப் பயன்படுத்தும் பயணிகள், பயணத்தைத் திட்டமிடும்போது கூடுதலாக 5 நிமிடத்தைச் சேர்த்துக்கொள்ளும்படி SMRT நிறுவனம் கேட்டுக்கொண்டது.

"ரயில் சேவை மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பியிருக்கிறது. பொறுமையாகக் காத்திருந்த பொதுமக்களுக்கு நன்றி. ரயில் சேவை மீண்டும் செயல்பட உதவிய அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி," என்று போக்குவரத்துத் துணையமைச்சர் முரளி
பிள்ளை 'செய்தி'யிடம் கூறினார்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்