Skip to main content
குழுத்தொகுதிகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குழுத்தொகுதிகள் - முக்கிய மாற்றங்கள்

தற்போதிருக்கும் ஈஸ்ட் கோஸ்ட், மரீன் பரேட், வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிகளில் குறிப்பாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

வாசிப்புநேரம் -
குழுத்தொகுதிகள் - முக்கிய மாற்றங்கள்

(படம்: Gaya Chandramohan)

சிங்கப்பூரில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மொத்தம் 18 குழுத்தொகுதிகள் இடம்பெறும்.

முந்தைய தேர்தலில் மொத்தம் 17 குழுத்தொகுதிகள் இருந்தன.

4 உறுப்பினர்களைக் கொண்ட குழுத்தொகுதிகள்

  1. பீஷான்-தோ பாயோ (Bishan-Toa Payoh)
  2. சுவா சூ காங் (Chua Chu Kang)
  3. ஹாலந்து-புக்கிட் தீமா (Holland-Bukit Timah)
  4. ஜாலான் புசார் ( Jalan Besar)
  5. மார்சிலிங்-இயூ டீ (Marsiling-Yew Tee)
  6. செங்காங் (Sengkang)
  7. பாசிர் ரிஸ்-சாங்கி (Pasir Ris-Changi)*
  8. பொங்கோல் (Punggol)*

(* புதிதாக அறிவிக்கப்பட்டவை)
சுருக்கமாகப் பார்க்க
📍 பாசிர் ரிஸ்-சாங்கி, பொங்கோல் குழுத்தொகுதிகள்

அவை தற்போது 5 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட
பாசிர் ரிஸ் -பொங்கோல் குழுத்தொகுதியிலிருந்து அமைக்கப்பட்டுள்ளன.

பொங்கோலில் சில வட்டாரங்களும் பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதியும் சேர்ந்து புதிய பொங்கோல் குழுத்தொகுதியாக மாறும்.

பாசிர் ரிஸ் -பொங்கோல் குழுத்தொகுதியின் எஞ்சிய வட்டாரங்களும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியிலிருந்து சில வட்டாரங்களும் சேர்ந்து புதிய பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதியாக உருமாறும்.

2020ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலுக்குப் பிறகு, பாசிர் ரிஸ் -பொங்கோல் குழுத்தொகுதியில் வசிக்கும் வாக்காளர் எண்ணிக்கை ஆக அதிகமாக அதிகரித்துள்ளது.

அங்கு புதிய வீடுகள் கட்டப்படும் நிலையில் மேலும் அதிகமானோர் குடியேறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தொகுதி எல்லைகளில் மாற்றம் செய்யப்படுவதாகத் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு சொன்னது.

5 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுத்தொகுதிகள்

  1. அல்ஜூனிட் (Aljunied)
  2. அங் மோ கியோ (Ang Mo Kio)
  3. ஈஸ்ட் கோஸ்ட் (East Coast)
  4. நீ சூன் (Nee Soon)
  5. செம்பவாங் (Sembawang)
  6. தெம்பனிஸ் (Tampines)
  7. தஞ்சோங் பகார் (Tanjong Pagar)
  8. வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் (West Coast-Jurong West)*
  9. ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக் (Jurong East-Bukit Batok)*
  10. மரீன் பரேட் - பிராடல் ஹைட்ஸ் (Marine Parade-Braddell Heights)*
(* புதிதாக அறிவிக்கப்பட்டவை)
சுருக்கமாகப் பார்க்க
📍 வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி

தற்போதைய வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் சில பகுதிகளையும், ஜூரோங் வெஸ்ட், தாமான் ஜூரோங் வட்டாரத்தின் சில பகுதிகளையும் சேர்த்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

சென்ற தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட் தொகுதியில் கடும் போட்டி நிலவியது.

📍 ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதி

தற்போதைய புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி, யூஹுவா தனித்தொகுதி, ஹோங் கா நார்த் தனித்தொகுதி ஆகியவற்றின் சில பகுதிகளையும் ஜூரோங் குழுத்தொகுதியின் சில வட்டாரங்களையும் இணைத்து புதிதாக ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.

📍 மரீன் பரேட் - பிராடல் ஹைட்ஸ் குழுத்தொகுதி

தற்போதைய மரீன் பரேட் குழுத்தொகுதியின் சில பகுதிகளும், பொத்தோங் பாசிர், மௌன்ட்பேட்டன் ஆகிய தனித்தொகுதிகளின் சில வட்டாரங்களும், மெக்பர்சன் தனித்தொகுதியும் சேர்ந்து புதிதாக மரீன் பரேட் - பிராடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியாக அமைக்கப்பட்டுள்ளது.

📍 வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் மாற்றங்கள்
  • வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் இருந்த ஹார்பர்பிரண்ட் (Harbourfront), செந்தோசா (Sentosa) பகுதிகள் ராடின் மாஸ் தனித்தொகுதிக்கு மாறிவிடும்.
  • வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியிலிருந்து டோவர், தெலோக் பிளாங்கா பேட்டைகள் நீக்கப்படும், அவை தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் இணைக்கப்படும்.

📍 மற்ற சில மாற்றங்கள்
  • ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியுடன் தற்போதைய மரீன் பரேட் குழுத்தொகுதியின் சில பகுதிகள் சேர்ந்துவிடும்.
  • தஞ்சோங் பகார் குழுத்தொகுதியுடன் டோவர், தெலோக் பிளாங்கா வட்டாரங்கள் சேர்ந்துவிடும்.
  • சுவா சு காங் குழுத்தொகுதியுடன் தெங்கா வட்டாரங்கள் சேர்ந்துவிடும்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்