Skip to main content
கூடுதல் வாக்காளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

கூடுதல் வாக்காளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்

வாசிப்புநேரம் -
கூடுதல் வாக்காளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்

(படம்: Hanidah Amin)

சிங்கப்பூரில் முந்தைய தேர்தலுடன் ஒப்பிடுகையில்
தற்போது 101,700க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.

தொகுதி எல்லைகள் மறுஆய்வுக்குழு வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

சிங்கப்பூரில் சுமார் 2.75 மில்லியன் வாக்காளர்கள் இருக்கின்றனர்.

அதிகரித்திருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை தொகுதிகளுக்கு இடையே சமமாகப் பகிரப்படவில்லை.

மக்கள்தொகை மாற்றம், புதிய வீடமைப்பு ஆகியவற்றால் சில தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை கூடியிருக்கிறது.

அதனால் தொகுதி எல்லைகளில் மாற்றம் செய்துள்ளதாகத் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக்குழு சொன்னது.

எதிர்வரும் தேர்தலில் 33 தொகுதிகளைப் பிரதிநிதிக்க
97 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

முந்தைய தேர்தலில் அந்த எண்ணிக்கை 93ஆக இருந்தது.

2025

🗳️ 5 உறுப்பினர் கொண்ட குழுத்தொகுதி -10
🗳️ 4 உறுப்பினர் கொண்ட குழுத்தொகுதி - 8
🗳️ தனித்தொகுதிகள் -15
🗳️ மொத்தம் - 33

2020

🗳️ 5 உறுப்பினர் கொண்ட குழுத்தொகுதி -11
🗳️ 4 உறுப்பினர் கொண்ட குழுத்தொகுதி - 6
🗳️ தனித்தொகுதிகள் -14
🗳️ மொத்தம் - 31
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்