Skip to main content
தேர்தல் தொகுதி எல்லைகள் வெளியிடப்பட்டுவிட்டன
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேர்தல் தொகுதி எல்லைகள் வெளியிடப்பட்டுவிட்டன - அடுத்து?

வாசிப்புநேரம் -
தேர்தல் தொகுதி எல்லைகள் வெளியிடப்பட்டுவிட்டன - அடுத்து?

(படம்: MCI)

தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு எதிர்வரும் தேர்தலுக்கான வாக்காளர் வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

அடுத்து என்ன எதிர்பார்க்கலாம்?

அரசியல் கட்சிகள் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடலாம் என்பதை முடிவுசெய்யும்.

கட்சிகளின் தேர்தல் கொள்கை அறிக்கைகளும் முழக்கவரிகளும் வெளியிடப்படும்.

1. நாடாளுமன்றம் கலைக்கப்படும்

பிரதமரின் ஆலோசனையின்படி அதிபர் நாடாளுமன்றத்தைக் கலைப்பார்.

அதைத் தொடர்ந்து பொதுத்தேர்தல் அடுத்த 3 மாதங்களுக்குள் நடைபெற வேண்டும்.

தேர்தல் முடியும்வரை முடிவெடுக்கும் அதிகாரம் அரசாங்கத்திடமே இருக்கும்.

அடுத்த அரசாங்கம் பொறுப்பேற்கும் வரை அது தொடரும்.

பொதுச்சேவை துறை வழக்கம்போல் செயல்படும்.

2. தேர்தல் ஆணை பிறப்பிக்கப்படும்

வழக்கமாக நாடாளுமன்றம் கலைக்கப்படும் அதே நாளன்று தேர்தல் ஆணை பிறப்பிக்கப்படும்.

தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு அறிக்கையை வெளியிட்ட பிறகு குறிப்பிட்ட காலத்திற்குள் பொதுத்தேர்தலை அறிவிக்க வேண்டும் என்ற கால வரம்பு ஏதுமில்லை.

2001ஆம் ஆண்டில் ஒரே நாளில் தேர்தல் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டில் தேர்தல் ஆணை 3 மாதங்கள் 10 நாள்களுக்குப் பிறகு பிறப்பிக்கப்பட்டது.

3. வேட்புமனுத் தாக்கல் தினம்

தேர்தல் ஆணை பிறப்பிக்கப்பட்டு 5 நாள்களுக்குப் பின் ஒரு மாதத்திற்குள் வேட்புமனுத் தாக்கல் நடக்க வேண்டும்.

தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் வேட்புமனு நிலையங்களில் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்.

நண்பகலுக்குள் அதனைச் செய்தாக வேண்டும்.

பிறகு போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் உறுதிசெய்யப்படுவர்.

வேட்பாளர்கள் அப்போது முதல் பிரசாரம் செய்யத் தொடங்கலாம்.

வழக்கமாக அது 9 நாள்களுக்கு நடக்கும்.

4. வாக்களிப்பு தினம்

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்கலாம்.

2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வாக்களிப்பு 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது.

கோவிட்-19 நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளால் வாக்களிப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் இருந்தது. அதனால் நேரம் நீட்டிக்கப்பட்டது.

அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாவதற்கு முன், மாதிரி வாக்குகள் வெளியிடப்படும்.

வெவ்வேறு தொகுதிகளில் யார் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என்பது அதில் தெரியவரும்.

மாதிரி வாக்குகள் 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்