Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மோசடித் தடுப்பு நடவடிக்கைகளுக்குக் குறைவான மதிப்பீட்டைப் பெற்ற Facebook Marketplace, Carousell இணையவர்த்தகத் தளங்கள்

வாசிப்புநேரம் -

Facebook Marketplace, Carousell ஆகிய இணையவர்த்தகத் தளங்கள், தங்களின் மோசடித் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆகக் குறைவான மதிப்பீட்டைப் பெற்றுள்ளன.

மின் வர்த்தகப் பரிவர்த்தனைகளைக் கூடுதல் பாதுகாப்புடன் மேற்கொள்வதற்குப் புதிய மதிப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இணைய மோசடிச் சம்பவங்களைத் தடுக்க பல்வேறு அமைச்சுகள் இணைந்து வெளியிட்ட நடவடிக்கைகளின் ஒருபகுதி அது.

தகவல் திருட்டைத் தடுக்க, இணையம்வழி பாதுகாப்பாகக் கட்டணம் செலுத்த, பொருள்களை விற்கும் தளம் எத்தகைய முன்னெச்சரிக்கை நடடிக்கைகளை எடுத்துள்ளது என்பதன் அடிப்படையில் மதிப்பீடுகள் வழங்கப்படும்.

பெரிய அளவில் மின் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 50 விழுக்காட்டு தளங்களுக்குத் தொடக்கமாக 4 என்ற மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

Amazon, Lazada, Qoo10 உள்ளிட்ட தளங்களுக்கு அந்த ஆக உயரிய மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

Facebook Marketplace, Carousell ஆகிய தளங்கள் 1, 2 என்ற மதிப்பீட்டைப் பெற்றுள்ளன.

மதிப்பீடு ஆண்டுதோறும் மறுஆய்வு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 2,700க்கும் அதிகமான மின் வணிக மோசடிச் சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டன.

மோசடியில் ஏமாற்றப்பட்டோர் சுமார் 6 மில்லியன் வெள்ளியை இழந்தனர்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்