Skip to main content
கள்ளப்பண விவகாரம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

கள்ளப்பண விவகாரம் - 8 சிங்கப்பூரர்களுக்கு 30 ஆண்டுவரை சிறை, பிரம்படி

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 8 சிங்கப்பூர் ஆடவர்கள் போதைப்பொருள் கடத்தல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றம் ஆகியவற்றில் ஈடுபட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கைது செய்த அந்தச் சிங்கப்பூரர்களுக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அதிகப்பட்சமாக 8 பிரம்படியும் விதிக்கப்பட்டது.

தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஆக இளையருக்கு 19 வயது.

ஆக அதிகமாக 30 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சிங்கப்பூரருக்கு வயது 55.

தீவெங்கும் நடத்தப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அந்த எட்டுப் பேரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 215,000 வெள்ளி.

அது ஒரு வாரத்திற்குச் சுமார் 950 போதைப்புழங்கிகள் பயன்படுத்தக் கூடியது என்று கூறப்பட்டது.

சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் சம்பாதிக்கப்பட்ட பணம் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

குற்றவாளிகள் போதைப் பொருள் மூலம் பெறப்பட்ட பணத்தையும் சொத்துக்களையும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அந்தப் பணத்தை உள்ளூரிலும் வெளிநாட்டிலும் மாற்றிவிட்டதும் தெரிய வந்தது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்