Skip to main content
காலை 9 மணிக்கே திறக்கப்படும் 8 நூலகங்கள்!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

காலை 9 மணிக்கே திறக்கப்படும் 8 நூலகங்கள்!

வாசிப்புநேரம் -
காலை 9 மணிக்கே திறக்கப்படும் 8 நூலகங்கள்!

படம்: 8world

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

புத்தகம் வாசிப்போருக்கு ஒரு நற்செய்தி!

8 பொது நூலகங்கள் நாளை முதல் காலை 9 மணிக்கே திறக்கப்படும்! வழக்கத்தை விட ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்கு முன்பே அவை செயல்படத் தொடங்கும்.

நூலகங்கள் வழக்கமாகக் காலை 10 அல்லது 11 மணிக்குத்தான் திறக்கப்படும்.

புக்கிட் பாஞ்சாங், செம்பவாங், சிராங்கூன், பாசிர் ரிஸ், பீஷான், பொங்கோல், தெம்பனிஸ், உட்லண்ட்ஸ் ஆகிய இடங்களில் உள்ள நூலகங்கள் காலை 9 மணிக்கே திறக்கப்படவுள்ளன.

காலையிலேயே அங்கு செல்ல விரும்புவோர் சந்தா அட்டை, அடையாள அட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தி நூலகத்திற்குள் நுழையலாம்.

ஆனால் நூலக ஊழியர்களின் சேவை காலை 10 அல்லது 11 மணிக்குத்தான் தொடங்கும்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்