Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'பொதுத்தேர்தலின்போது கல்வியமைச்சர் பதிவேற்றிய காணொளி குறித்து கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது'

சிங்கப்பூர்ப் பொதுத்தேர்தலின்போது கல்வியமைச்சர் ஓங் யீ காங் பதிவேற்றிய காணொளி தொடர்பாக, காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்கமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்ப் பொதுத்தேர்தலின்போது கல்வியமைச்சர் ஓங் யீ காங் பதிவேற்றிய காணொளி தொடர்பாக, காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்கமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்துறையும் சிங்கப்பூர்க் காவல்துறையும் அதுகுறித்த கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன.

தேர்தலின்போது, செம்பவாங் குழுத்தொகுதியில் போட்டியிட்ட திரு. ஓங், அதே வட்டாரத்தைச் சேர்ந்த சிறுவனிடம் பள்ளி அனுபவம் குறித்து விசாரித்ததோடு சிறுவனுடன் எடுத்துக்கொண்ட காணொளி ஒன்றை இம்மாதம் 2ஆம் தேதி சமூக ஊடகத்தில் பதிவேற்றினார்.

ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் சட்டப்படி தொடக்கப்பள்ளிக்கோ உயர்நிலைப் பள்ளிக்கோ செல்லும் மாணவர்கள் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி இல்லை.

உதவித் தேர்தல் அதிகாரி அதுகுறித்து, திரு. ஓங்கிற்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்தார்.

தேர்தல் பிரசார விதிமுறைகளுக்கு இணங்கி நடக்குமாறு அதில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதை ஏற்றுக்கொண்டு திரு. ஓங், காணொளியைப் பதிவேற்றிய அதே நாளில் அதை நீக்கியதோடு மன்னிப்பும் கேட்டுக்கொண்டிருந்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்