சிங்கப்பூரில் எத்தனை பெண்கள் கரு முட்டைகளை உறையவைத்துள்ளனர்?
(படம்: Pixabay)
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் கரு முட்டைகளை உறையவைக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து 800க்கும் அதிகமான பெண்கள் அதில் பங்கெடுத்துள்ளனர்.
சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் (Ong Ye Kung) அந்தத் தகவல்களை அளித்தார்.
அவர்களில்...
35 வயது அல்லது அதற்கும் மேலானவர்கள்: சுமார் 57%
30 வயது முதல் 34 வயதுடையவர்கள்: 39%
30 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள்: 4%
அரசாங்க மருத்துவமனைகளில் ஒரு முறை கரு முட்டைகளை உறையவைப்பதற்குச் சுமார் 10,000 வெள்ளி செலவாகலாம்.
கரு முட்டைகளை உறையவைக்கும் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குத் திரு ஓங் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.