தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது
வாசிப்புநேரம் -
(படம்: Google Maps)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் இன்று அதனை அறிவித்தது.
குழுத்தொகுதிகள், தனித்தொகுதிகள் ஆகியவற்றைப் பற்றி மறுஆய்வுக் குழு பரிந்துரைகள் செய்யும் என்று தேர்தல்துறை கூறியது.
வாக்காளர் பட்டியலை பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பார்வையிடலாம் என்றும் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன் மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரர்கள் வாக்காளர் பட்டியலை எப்படிச் சரிபார்க்கலாம் என்ற விவரங்களைத் தேர்தல்துறை வழங்கும்.
அடுத்த பொதுத்தேர்தல் சிங்கப்பூரின் 14ஆவது பொதுத்தேர்தலாக அமையும்.
பிரதமர் லாரன்ஸ் வோங்கின் தலைமைத்துவத்தின்கீழ் நடைபெறும் முதல் தேர்தலாக இருக்கும்.
இவ்வாண்டு நவம்பர் மாதத்திற்குள் சிங்கப்பூரின் பொதுத்தேர்தல் நடைபெறவேண்டும்.