Skip to main content
ஒவ்வொரு பேட்டையிலும் சீக்கிரம் மின்னூட்டும் முகப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஒவ்வொரு பேட்டையிலும் சீக்கிரம் மின்னூட்டும் முகப்பு

வாசிப்புநேரம் -
மின் கார்களைச் சீக்கிரமாக மின்னூட்டும் நடுவங்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஒவ்வொரு கழகப் பேட்டையிலும் குறந்தது ஒன்றாவது அமைக்கப்படவுள்ளது.

ஒவ்வொரு நடுவத்திலும் குறைந்தது ஆறு மின்னூட்டும் முகப்புகள் இருக்கும்.

செங்காங்கில் (Sengkang) உள்ள Compass One கடைத்தொகுதி, மெக்பர்சன் (MacPherson) சந்தை, தெங்காவில் (Tengah) உள்ள Plantation Plaza ஆகிய இடங்களில் மின் கார்களுக்கு மின்னூட்டும் சேவைகளின் தேவை அதிகமுள்ளது.

ஆகவே அத்தகைய இடங்களில் நடுவங்கள் முதலில் அமைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது கழகப் பேட்டைகளில் உள்ள 70 கார் நிறுத்துமிடங்களில் 150 விரைவு மின்னூட்ட முகப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்