Skip to main content
சிங்கப்பூரின் மின்சார விலை எப்படி கணக்கிடப்படுகிறது?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் மின்சார விலை எப்படி கணக்கிடப்படுகிறது?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் மின்சார விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. மத்திய கிழக்கில் மோதல் தொடங்கியதிலிருந்து
விலைகள் அதிகரித்துள்ளன. ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை வீடுகளின் மின்சாரக் கட்டணம் (பொருள் சேவை வரிக்கு முன்) 0.56 காசு அதிகரிக்கும். இது முந்தைய காலாண்டை விட 2.1 விழுக்காடு அதிகம். சிங்கப்பூரின் மின்சாரம் எப்படி விநியோகிக்கப்படுகிறது? ⚡சிங்கப்பூரில் 63.1 விழுக்காடு வீடுகள் ஒழுங்குமுறை மின்சாரக் கட்டண முறையின்கீழ் (Regulated Tariff) உள்ளன. ⚡ 36.9 விழுக்காடு வீடுகள் தடையற்ற பொது மின்சாரச் சந்தை வழங்கும் மின்சாரத் திட்டங்களைப் வாங்குகின்றன.
இவர்கள் 12 அல்லது 24 மாதங்கள் நீடிக்கும் நிலையான விலைத் திட்டங்களைத் தேர்வுசெய்யலாம். SP குழுமம் வழங்கிய தரவுகளின்படி... தற்போதைய மின்சாரக் கட்டணம் ஒரு கிலோவாட்டிற்கு 27.27 காசு. ஜனவரியில் கட்டணம் ஒரு கிலோவாட்டிற்கு 26.71 காசாக இருந்தது. மின்சாரக் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? எரிபொருள் செலவு: 💲 மின்சாரக் கட்டணத்தில் சுமார் 76 விழுக்காடு எரிபொருள் செலவு 💲 அதனால் உலகில் எரிபொருள் விலை உயர்ந்தால் மின்சாரக் கட்டணமும் உயரும் 💲 மாதாந்திரக் கட்டணம் முந்தைய காலாண்டின் முதல் இரண்டரை மாத விலையின் சராசரியை வைத்து கணக்கிடப்படுகிறது 💲 அதாவது ஏப்ரல்-ஜுன் மாதங்களுக்குச் செலுத்தும் மின்சாரக் கட்டணம் அந்த மாதங்களுக்கான எரிபொருளின் விலையை வைத்து இல்லை. கடந்த ஜனவரி முதல் மார்ச் நடுப்பகுதிவரை உள்ள எரிபொருள் விலையை வைத்துத்தான் அது கணக்கிடப்படுகிறது. 💲அதனால் எரிபொருள் விலை ஏப்ரலில் உயர்ந்தாலும் அடுத்த காலாண்டில்தான் (July–September) கட்டணத்தில் தாக்கம் தெரியும். 💲 எனவே சமீபத்திய எரிபொருள் விலையின் உயர்வு வீட்டுக் கட்டணங்களில் பிரதிபலிக்க சிறிது காலம் ஆகும். 76% எரிபொருள் செலவு... எஞ்சிய தொகை? எரிபொருள் அற்ற செலவுகளுக்குக் கணக்கிடப்படுகிறது. 💲 மின்சார விநியோகச் செலவு 💲மின்சார அமைப்பை இயக்கும் செலவு 💲மின்சாரப் பயன்பாட்டை கணக்கிடுவதற்கான செலவு 💲 கட்டணச் சீட்டு கொடுப்பதற்கான செலவு ஒட்டுமொத்தத்தில் ஜூலை மாதத்திலிருந்து கட்டணத்தில் கணிசமான உயர்வை எதிர்பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்