Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 13,000 வெள்ளி பெறுமான மின்-சிகரெட்டுகள்

வாசிப்புநேரம் -

குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணைய அதிகாரிகள் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் 13,000 வெள்ளி பெறுமான மின்-சிகரெட்டுகளையும் மற்ற சாதனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்

மொத்தம் 3,200 மின்-சிகரெட்டுகளும் 17,000க்கும் மேற்பட்ட இதரச் சாதனங்களும் சிங்கப்பூருக்குள் நுழைந்த 3 மலேசிய லாரிகளில் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சுகாதார அறிவியல் ஆணையமும் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது. 

அந்த லாரிகள் இம்மாதம் 9ஆம் தேதிக்கும் 13ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூருக்குள் வந்தன. 

சம்பவங்கள் குறித்துச் சுகாதார அறிவியல் ஆணையம் விசாரணை நடத்துவதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்தது. 

விசாரணையில் 27 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்ட 4 மலேசிய ஆடவர்கள் உதவிவருவதாகக் கூறப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்