இணைய விளையாட்டுப் படைப்புகளை உருவாக்குவோருக்கு உதவும் புதிய பயிற்சித் திட்டம்
மீடியாகார்ப் நிறுவனமும், EMERGE Esports நிறுவனமும் இணைந்து இணைய விளையாட்டுகள் தொடர்பான படைப்புகளை உருவாக்குவோரை ஊக்குவிக்கப் புதியதொரு திட்டத்தை அமைத்துள்ளன.

(படம்: EMERGE Esports)
மீடியாகார்ப் நிறுவனமும், EMERGE Esports நிறுவனமும் இணைந்து இணைய விளையாட்டுகள் தொடர்பான படைப்புகளை உருவாக்குவோரை ஊக்குவிக்கப் புதியதொரு திட்டத்தை அமைத்துள்ளன.
ஓராண்டுக்கு நீடிக்கும் இத்திட்டம், புதிய படைப்பாளர்களின் படைப்புத் திறன், அறிவாற்றல் ஆகியவற்றை வளர்க்க முற்படுகிறது.
படைப்புகளின் தன்மையை மேம்படுத்தவும் மக்களின் ஆர்வத்தை ஈர்க்கவும் மீடியாகார்ப், EMERGE Esports ஆகியவை மீடியாகார்ப்பின் Bloomr.SG தளத்தில் இணைந்து செயல்படுகின்றன.
வளர்ந்துவரும் அத்தகைய படைப்பாளர்களுக்கு மேலும் வாய்ப்புகள் அளிக்கும் நோக்கில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மீடியாகார்ப் நிறுவனத்தின் Bloomr.SG தளத்தின் குழுத் தலைவர் டியோகோ மார்டின்ஸ் (Diogo Martins) சொன்னார்.
திட்டத்தின மூலம், EMERGE Esportsஇன் திறமைமிக்கப் படைப்பாளர்களுக்கு ஆதரவு வழங்கப்படும்.
அவர்களுக்கு உள்ளூர், வெளிநாட்டுப் பிரபலங்களுடன் இணைந்து படைக்கவும் வாய்ப்புகள் வழங்கப்படும்.
படைப்பாளர்கள், தங்கள் படைப்புகளை உருவாக்க மீடியாகார்ப்பின் வளங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.