Skip to main content
புகைமூட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

புகைமூட்டம் - சிகிச்சை நாடுவோர் எண்ணிக்கை 20% உயர்வு

வாசிப்புநேரம் -
புகைமூட்டம் - சிகிச்சை நாடுவோர் எண்ணிக்கை 20% உயர்வு

(படம்: Envato Elements)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் புகைமூட்டப் பிரச்சினைகளுக்காக அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்குச் சென்றோரின் அன்றாட எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

செப்டம்பர் தொடக்கத்திலிருந்து சென்ற மாதத்தின் நடுப்பகுதி வரை அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 20 விழுக்காடு அதிகரித்திருந்தது. 

அதாவது நாளொன்றுக்கு ஏறத்தாழ 440 பேர் கூடுதலாகச் சென்றனர்.

அக்டோபர் 12ஆம் தேதி மருந்தகங்களில் புகைமூட்டக் கட்டணச் சலுகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அதன்பிறகு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தால் 
அதைச் சமாளிக்கத் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சொன்னது.

தேவை ஏற்பட்டால் அவை நடைமுறைப்படுத்தப்படும்.

நிலைமையைப் பொறுத்துக் கூடுதல் ஊழியர்கள் 
பணியில் ஈடுபடுத்தப்படுவர். 

நோயாளிகளுக்கான சிகிச்சை தடையின்றித் தொடர்வதும் உறுதிசெய்யப்படும் என்று அமைச்சு கூறியது.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்