Skip to main content
$3.8 மில்லியன் வரி செலுத்தவில்லை?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

$3.8 மில்லியன் வரி செலுத்தவில்லை? - உணவக உரிமையாளர் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
$3.8 மில்லியன் வரி செலுத்தவில்லை? - உணவக உரிமையாளர் மீது குற்றச்சாட்டு

படம்: CNA/Wallace Woon

வெளியீடு : 03 Jul 2026 05:18PM புதுப்பிப்பு : 03 Jul 2026 05:35PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் சுமார் 3.8 மில்லியன் வெள்ளி வரி செலுத்தத் தவறியதாக உணவக உரிமையாளர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

49 வயது புந்தோனோ (Buntono) கேலாங்கில் Eminent Frog Porridge & Seafood எனும் உணவகத்தை நடத்தி வருகிறார்.

கணக்குக் காட்டிய பணத்தைவிட அவர் சம்பாதித்த பணம் அதிகம்.

அதன்படி புந்தோனோ செலுத்தத் தவறிய வருமான வரி கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் வெள்ளி.

குறைந்த வருமானம் ஈட்டியதாகச் சொன்னதால் அவர் பொருள், சேவை வரி செலுத்தவில்லை.

ஓராண்டில் நிறுவனத்தின் வரிவிதிப்புக்கு உட்பட்ட வருமானம் ஒரு மில்லியனைத் தாண்டினால் பொருள், சேவை வரி செலுத்தவேண்டும்.

அல்லது எதிர்வரும் ஆண்டில் நிறுவனம் அந்தத் தொகையை ஈட்டும் என்று மதிப்பிடப்பட்டாலும் பொருள், சேவை வரி கட்டவேண்டும்.

புந்தோனோ சுமார் 1.8 மில்லியன் வெள்ளி வரி ஏய்ப்புச் செய்தார் என்று நம்பப்படுகிறது.

சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் காவல்துறையும் இணைந்து நடத்திய விசாரணையில் புந்தோனோ பிடிபட்டார்.

அவர் மீது 30 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்