Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சவால்மிக்க வருங்காலத்தை வழிநடத்த முதலாளிகள் சம்மேளனம் உதவவேண்டும்

வாசிப்புநேரம் -
துணைப்பிரதமர் கான் கிம் யோங் புதிய சவால்களைக் கொண்ட வருங்காலத்தை வழிநடத்த உதவுமாறு முதலாளிகள் சம்மேளனத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

எதிர்காலத்தின் நிச்சயமற்றநிலை, தொழில்நுட்ப முன்னேற்றம், மூப்படையும் ஊழியரணி ஆகிய சவால்களை அவர் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூரின் முத்தரப்புக் கூட்டணி நாட்டுக்கு நன்மை அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர்த் தேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் 45வது ஆண்டுநிறைவுக் கொண்டாட்டத்தில் திரு கான் பேசினார்.

தொழிலாளர்களின் திறனை வளர்ப்பது முக்கியம் என்று திரு கான் கூறினார்.

முதலாளிகள் வேலை மறுஉருவாக்கத்தைத் துரிதமாக்க வேண்டும், தொழில்நுட்ப உத்திகளை நிறுவனத்தில் பயன்படுத்தி, அனைவரையும் உள்ளடக்கும் வாழ்க்கைத் தொழிலை உருவாக்கவேண்டும் என்றார் அவர்.

முதலாளிகளுக்கு இணையத்தில் சேவை நிலையத்தைத் தொடங்கிவைத்தது சம்மேளனம்.

அதில் அரசாங்க மானியங்கள், திட்டங்கள் ஆகியவற்றுக்கான உதவி, ஆய்வுகள், வழிகாட்டிகள் போன்றவை இருக்கும்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்