Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மே மாதத்தில் வேலையின்மை விகிதம் நிலையாக இருந்தது: மனிதவள அமைச்சு

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் மே மாத வேலையின்மை விகிதம் நிலையாய் இருந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. 

மே மாத ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தைப் போலவே மாற்றமின்றி 2.2 விழுக்காடாக இருந்தது. 

பொருளியல் நிலவரம் மேம்பட்டுவருவதால் அதிகமானோர் வேலையில் சேர்ந்துவருவதை அமைச்சு சுட்டியது. 

பொருளியல் மந்தம் ஏற்படும் வாய்ப்பு குறைவான சூழல் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உதவும் என்று அது குறிப்பிட்டது. 

ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடும்போது குடியிருப்பாளர்களின் வேலையின்மை விகிதம் தொடர்ந்து மூன்று விழுக்காடாக நீடித்தது.

குடிமக்கள் இடையிலான வேலையின்மை விகிதமும் மாற்றமின்றி 3.1 விழுக்காடாக இருந்தது. 

மே மாதம் வேலையில்லாமல் இருந்த 72,300 குடியிருப்பாளர்களில் சுமார் 90 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள். 

வரும் மாதங்களில் சம்பளம் உயருமெனப் பொருளியல் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். 

ஆனால் பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அவர்கள் எச்சரித்தனர்.

மேலும் உலகளாவிய பொருளியல் மந்தம் ஏற்பட்டால் அது வரும் மாதங்களில் வர்த்தக முடிவுகளை பாதிக்கக்கூடும் என்றும் கூறப்பட்டது. 

பயணக் கட்டுப்பாடுகள் அகற்றப்படுவதால் அதனோடு தொடர்புடைய எல்லாத் துறைகளும் மீட்படைந்து வேலைவாய்ப்புகளும் சம்பளமும் அதிகரிக்கவே செய்யுமென்பதை நிபுணர்கள் சுட்டினர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்