79% பட்டதாரிகளுக்கு ஆறே மாதத்தில் வேலை
This audio is generated by an AI tool.
தனியார் கல்வி நிலையங்களில் பட்டப் படிப்பை முடிப்போர் வேலை வாய்ப்புப் பெறும் விகிதம் கடந்த ஈராண்டாக நிலையாக இருந்துள்ளது.
Skillsfuture சிங்கப்பூர் அமைப்பு நடத்திய "தனியார் கல்வி நிலையப் பட்டதாரிகள் வேலைவாய்ப்புக் கருத்தாய்வில்" அந்தத் தகவல் தெரியவந்தது.
2024இலும் 2025இலும் தனியார் கல்வி நிலையங்களில் பயின்றவர்களில் கிட்டத்தட்ட 79 விழுக்காட்டினர் பட்டம் பெற்ற 6 மாதங்களில் வேலையில் சேர்ந்தனர் என்கிறது ஆய்வு.
இது 2023, 2024இல் பதிவானதைப் போல் நிலையாக இருந்தது.
முழுநேர வேலைக்குச் சேர்ந்தவர்களின் இடைநிலை மாத வருமானம் 3,500 வெள்ளியாக இருந்தது.
கருத்தாய்வில் மொத்தம் 2,600 பேர் கலந்துகொண்டனர்.