Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கல்வி வளாகங்களில் உடற்குறையுள்ளோருக்குக் கூடுதல் வாய்ப்புகள்.....கூட்டுத் திட்டம் கையெழுத்தானது

வாசிப்புநேரம் -
கல்வி வளாகங்களில் உடற்குறையுள்ளோருக்குக் கூடுதல் வாய்ப்புகளை வழங்க SG Enable அமைப்பு துமாசிக் பலதுறைத் தொழிற்கல்லூரியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.

அத்தகைய முதல் கூட்டுத் திட்டம் அது.

தொண்டூழியம், அறிவாற்றல் திறன் பகிர்வு ஆகியவற்றின் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டம் வகைசெய்யும்.

உடற்குறையுள்ளோர் நலன் சார்ந்த குழுக்கள், சமூகச் சேவை மன்றங்கள் ஆகியவற்றுடன் இணைந்து அவ்வாறு செய்யப்படும்.

SG Enable அமைப்புடன் சேர்ந்து செயல்படத் துமாசிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் SENvocates எனும் தொண்டூழியர் குழு நிறுவப்பட்டுள்ளது.

வெளி அமைப்புகள் தொண்டூழியச் சேவையை நாடும்போது, குழு உறுப்பினர்கள் அவ்விடங்களுக்குச் சென்று சமூகத்தில் உடற்குறை பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவர்.

உயர்கல்வி நிலையங்களுடன் மேலும் இணைந்து செயல்பட இந்தத் திட்டம் வழியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு எடுத்துரைக்கவும் உடற்குறையுள்ளோருக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்தித் தரவும் அது வகைசெய்யும்.

அதற்கான இணக்கக் குறிப்பு Enabling Lives நிகழ்ச்சியில் கையெழுத்தானது.

அந்த 4 நாள் நிகழ்ச்சி உடற்குறையுள்ளோர், அவர்களைக் கவனித்துக் கொள்வோர், பொதுமக்கள் ஆகியோரை ஒன்றுசேர்க்கிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்