சிங்கப்பூரில் லாரி ஓட்டுநர்கள் மீது சோதனை

SPF
சிங்கப்பூரில் தீவு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் மீது சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் ஜூன் 9,10 ஆகிய தேதிகளில் சோதனை நடவடிக்கை நடத்தினர்.
மொத்தம் 56 லாரிகள் சோதனைக்காக நிறுத்தப்பட்டன.
32 போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் 17 லாரி ஓட்டுநர்கள் வேகக் கட்டுப்பாட்டை மீறியது தெரியவந்தது.
வேகக் கட்டுப்பாட்டை மீறியது, லாரி ஓட்டும்போது கைத்தொலைபேசி பயன்படுத்தியது, இருக்கை வார் அணியத் தவறியது உள்ளிட்ட பல குற்றங்களுக்காக அழைப்பாணை விடுக்கப்பட்டது.
அத்துடன் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் சோதனை நடவடிக்கையின்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட speed limiter குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதத்திற்குள் லாரிகளில் speed limiter எனும் வேகக்கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்தவேண்டும்.
இதுவரை 10 விழுக்காட்டிற்கும் குறைவான லாரி முதலாளிகள் அதனைச் செய்திருப்பதாகப் போக்குவரத்துக் காவல்துறை சொன்னது.