சிங்கப்பூரில் 500,000 பேரை நீச்சல் வகுப்புகளில் சேர்க்கத் திட்டம்

Unsplash/Jonathan Chng
சிங்கப்பூரில் அனைத்து வயதினருக்கும் பொருந்தக்கூடியவகையில் நீச்சல் கல்வி அணுகுமுறையை வழங்கப் புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
OCBC வங்கி ஆதரவில் SwimSingapore திட்டம் அறிமுகமாகிறது.
அடுத்த ஐந்தாண்டில் அரை மில்லியன் பேரை நீச்சல் வகுப்புகளில் சேர்ப்பது இலக்கு.
வயது, திறன்கள் ஆகியவற்றுக்கு அப்பால் சிங்கப்பூரர்களிடையே நீச்சலை ஊக்குவிக்கும் முயற்சிகளில் அதுவும் அடங்கும்.
தேசிய திறனாளர்களை வளர்ப்பதற்கும் திட்டம் கைகொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
உற்சாகமான, மகிழ்ச்சியான வகையில் சிறுவயது முதல் நீச்சலைக் கற்பிப்பதில் SwimSingapore கட்டமைப்பு முக்கியப் பங்குவகிக்கும்.
நிகழ்ச்சியில் சுகாதார மூத்த துணையமைச்சர்
டான் கியட் ஹாவ் (Tan Kiat How) கலந்துகொண்டார்.
நீச்சலைக் கற்றுக்கொள்ளும் அனைவருக்கும் அடித்தளம் அமைத்துக்கொடுக்கும் தேசியப் பாடத்திட்டம் இருப்பது அவசியம் என்றார் அவர்.
மேலும் போட்டித்தன்மைமிக்க பாதைகளையும் வாய்ப்புகளையும் அது அமைத்துக்கொடுக்கும் என்று அவர் சொன்னார்.