சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
EP, SPass சம்பள வரம்புகள் அதிகரிப்பதால் தனித்துவத் திறன் தேவைப்பட்டால் மட்டுமே, நிறுவனங்கள் வெளிநாட்டினரைப் பணியில் சேர்க்கும்: மனிதவள நிபுணர்

(படம்: AFP/Roslan Rahman)
புதிய மேல்நிலை வேலை அனுமதிக்குத் தகுதிபெறுவதற்கான சம்பளம் 4,500 வெள்ளியிலிருந்து ஐயாயிரம் வெள்ளிக்கு உயர்த்தப்படவிருப்பதாக இன்றைய வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதிச் சேவைத் துறையைப் பொறுத்தவரிய தகுதிச் சம்பளம் ஐயாயிரம் வெள்ளியிலிருந்து 5,500 வெள்ளிக்கு உயர்த்தப்படும்.
திறன் வேலை அனுமதிக்குத் (SPass) தகுதிபெறுவதற்கான சம்பளம் 2,500 வெள்ளியிலிருந்து மூவாயிரம் வெள்ளிக்கு உயர்த்தப்படும்.
செப்டம்பர் மாதம் முதல் அது நடப்புக்கு வரும்.
அத்துடன் 2024ஆம் ஆண்டிலிருந்து கட்டுமானம், பதனீட்டுத் துறைகளில் வேலை அனுமதிச்சீட்டு வைத்திருப்போர் விகிதமும் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தனித்துவமான திறன்கள் இருந்து, அது கட்டாயம் தேவை என்ற நிலை இருந்தால் மட்டுமே நிறுவனங்கள் வெளிநாட்டினரைப் பணியில் சேர்க்கும் என்றார் மனிதவளத் துறை நிபுணர் அரவிந்த் மதுசூதனன்.
Dependency Ratio எனப்படும் உள்ளூர் ஊழியர்கள் வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கை இடையிலான விகிதம் குறையும். இதனால் உள்ளூர் ஊழியர்களின் வேலை வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கும் என்றார் அவர்.
SPass சம்பள வரம்பு உயர்த்தப்படுவது, அரசாங்கம் கடந்த சில ஆண்டுகளாக எடுத்துவரும் முயற்சியுடன் ஒத்து இருப்பதாகச் சொன்னார் கணக்காய்வாளர் ராமசாமி சொக்கலிங்கம். இதன் மூலம் உள்ளூரில் மேலும் அதிகமானோரை வேலைக்கு அமர்த்தமுடியும் என்றார் அவர்.
தகுதிபெறுவதற்கான சம்பளத்தைத் தாண்டி, அனுமதிக்கான தகுதியும் மறு மதிப்பீடு செய்யப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. சிங்கப்பூருக்கு போட்டித்தன்மை மிக்கவர்களை மட்டுமே வரவழைக்கவேண்டும் என்பதே இதன் நோக்கம்.
என்றார் திரு சொக்கலிங்கம்.