பேருந்து நேர முன்னறிவிப்பில் எதனால் கோளாறு ஏற்பட்டது?
படம்: CNA/Charmaine Jacob
பல்வேறு கண்ணாடியிழைக் கம்பிவடங்கள் சேதமடைந்ததால் பேருந்து நேர முன்னறிவிப்பில் கோளாறு ஏற்பட்டதாகப் போக்குவரத்து தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் (Jeffrey Siow) தெரிவித்துள்ளார்.
சென்ற மாதம் (ஏப்ரல்) 18ஆம் தேதி கம்பிவடங்கள் சேதமடைந்திருந்தது தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட கம்பிவடத்திலிருந்து மற்றொரு கம்பிவடத்திற்குத் தரவுகள் மாற்றிவிடப்பட்டன.
ஆனால் அனைத்துத் தரவுகளும் வெற்றிகரமாக மாறவில்லை என்று திரு சியாவ் கூறினார்.
அதனால் பேருந்து நேர முன்னறிவிப்பில் 70 விழுக்காடு மட்டுமே செயல்பட்டது.
கண்ணாடியிழைக் கம்பிவடம் சீர் செய்யப்பட்ட பிறகு பேருந்து நேர முன்னறிவிப்பு முழுமையாகச் செயல்படத் தொடங்கியது.
பேருந்து நேர முன்னறிவிப்பு அமைப்பில் வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று விசாரணையில் தெரிந்தது.
சேதமடைந்த கம்பிவடத்திலிருந்து இன்னொரு கம்பிவடத்திற்குத் தரவுகள் ஏன் முழுமையாகச் சென்றுசேரவில்லை என்பதை நிலப் போக்குவரத்து ஆணையம் விசாரிக்கிறது.
பேருந்து நேர முன்னறிவிப்பு அமைப்பு மேம்படுத்தப்படுவதாகவும் திரு சியாவ் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு (2027) இறுதிக்குள் புதிய அமைப்புச் செயல்படுத்தப்படும்.