Skip to main content
அபு தாபி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

அபு தாபி - சிங்கப்பூர் விமானச் சேவை மீண்டும் தொடங்குகிறது

வாசிப்புநேரம் -
அபு தாபி - சிங்கப்பூர் விமானச் சேவை மீண்டும் தொடங்குகிறது
(படம்: AFP/Frederic J Brown)
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் (UAE) இருந்து சிங்கப்பூருக்குச் சில விமானச் சேவைகள் மீண்டும் தொடங்குகின்றன.

எத்திஹாட் ஏர்வேஸ் (Etihad Airways), எமிரேட்ஸ் (Emirates) ஆகிய நிறுவனங்கள் சேவை வழங்குகின்றன.

நாளை முதல் அபு தாபியிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்படும் விமானப் பயணங்களுக்கு எத்திஹாட் ஏர்வேஸ் பயணச்சீட்டு விற்பனையைத் தொடங்கியது.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் உள்ள பலரும்
பயணச்சீட்டை வாங்க முயற்சி செய்வார்கள்.

சிங்கப்பூரர்கள் உடனடியாக இணையம் வழி பயணச்சீட்டை வாங்கவேண்டும் என்று அபு தாபியில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அறிவுறுத்தியது.

தற்போதைய சூழலில் விமானப் பயணகள் ரத்து செய்யப்படலாம், தாமதமாகலாம்.

சிங்கப்பூரர்கள் அதற்குத் தயாராக இருக்கவேண்டும் என்றது தூதரகம்.

பயணச்சீட்டை வாங்கியதும் சேவை தொடருமா என்று விமான நிறுவனத்துடன் உறுதி செய்துகொண்ட பிறகு விமான நிலையத்திற்குச் செல்லும்படி தூதரகம் கேட்டுக்கொண்டது.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்